ETV Bharat / state

மதுரையில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 804ஆக குறைவு!

author img

By

Published : Sep 2, 2020, 10:30 PM IST

மதுரை: மாவட்டத்தில் தற்போது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 804ஆக குறைந்துள்ளது.

The number of people receiving treatment for corona infection in Madurai has come down to 804

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில், இன்று மட்டும் மதுரையில் 123 பேர் வைரஸ் தொற்றின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 201 பேர் பூரண நலம் பெற்று வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். இதையடுத்து, தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 804ஆக குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றால் 14 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர், சிகிச்சை பலனின்றி 360 பேர் உயிரிழந்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.