ETV Bharat / state

மதுரையில் கரோனா சிகிச்சையில் 856 பேர் - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு

மதுரை : கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 856ஆகக் குறைந்துள்ளது.

மதுரையில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 856 ஆக குறைவு

author img

By

Published : Aug 29, 2020, 8:25 PM IST

மதுரையில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் இன்று (ஆக. 29), புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 114 பேர் பூரண நலம் பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி நான்கு பேர் உயிரிழந்தனர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றால் 13 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 684 பேர் சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 354 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 856 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.