ETV Bharat / state

'கருணாநிதியைக் கண்டே அஞ்சியதில்லை, உதயநிதியைக் கண்டா அஞ்சப்போகிறோம்'

கருணாநிதி பரப்புரைசெய்த காலத்திலேயே அஞ்சாத அதிமுக, உதயநிதி ஸ்டாலின் பரப்புரையைக் கண்டா அஞ்சப்போகிறது என மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

mla rajan sellappa
'கருணாநிதி பரப்புரயை கண்டே அஞ்சியதில்லை, உதயநதியை கண்ட அஞ்சப்போகிறோம்'- ராஜன் செல்லப்பா
author img

By

Published : Nov 25, 2020, 5:23 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குள்பட்ட நிலையூர் - கைத்தறி நகரில் உள்ள சாலைகள் சேதமடைந்ததையொட்டி 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா பங்கேற்று சாலைப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சாதனைக்கு யாரும் உரிமை கோர முடியாது. அதிமுக அரசும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே உரிமை கோர முடியும். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்குத் தாங்கள்தான் காரணம் என திமுக தலைவர் பொய்யான தகவலைத் தெரிவித்துவருகிறார்.

'கருணாநிதியை கண்டே அஞ்சியதில்லை, உதயநிதியை கண்டா அஞ்சப்போகிறோம்'

இதேபோல் ஏழு பேரை விடுதலை செய்வதில் அரசு நடவடிக்கை எடுப்பதை தெரிந்துகொண்டு முன்கூட்டியே ஆளுநரை ஸ்டாலின் சந்தித்துள்ளார். 7 பேர் விடுதலையில் திமுக ஆட்சிக் காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால் மட்டுமே 7 பேர் விடுதலை செய்வதற்கான வழிமுறை சாத்தியமானது.

ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்தபோது ஆளுநர் அதிலுள்ள சட்ட நுணுக்கங்களைத் தெரிவித்துள்ளார் என ஸ்டாலின் கூறியிருக்கிறார். எனவே, 7 பேர் விடுதலைக்கு அதிமுக அரசு மட்டுமே அழுத்தம் கொடுக்கும்.

ஏழு பேரை விடுதலை செய்வதில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம்; ஆனால் அவர் கையைப் பிடித்து கையெழுத்துப் போடவைக்க முடியாது. எனவே, சட்டவிதி முறைப்படி விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள்" என்றார்.

மேலும், கரோனா ஊரடங்கையும் மீறி திமுக பரப்புரை செய்துவருவது குறித்து பேசிய அவர், "கருணாநிதி பரப்புரை மேற்கொண்டபோதிலும் அதிமுக பயந்ததில்லை, உதயநிதி ஸ்டாலினின் பரப்புரையைக் கண்டும் அச்சப்படவில்லை, கரோனாவிலிருந்து மக்களைக் காக்கவே பரப்புரைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.