ETV Bharat / state

'விவசாயிகளின் வாழ்வில் முதலமைச்சர் ஒளி ஏற்றியுள்ளார்'- ஆர்.பி. உதயகுமார்

மதுரை: டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம் விவசாயிகளின் வாழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒளி ஏற்றியுள்ளார் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர் பி உதயகுமார்  சிறப்பு வேளாண் மண்டலம்  திருமங்கலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  திருமங்கலம் செய்திகள்  r p udhayakumar  admk function  The Chief Minister has shed light on the lives of the farmers
விவசாயிகளின் வாழ்வில் முதலமைச்சர் ஒளியேற்றியுள்ளார்- ஆர்.பி. உதயகுமார்
author img

By

Published : Feb 11, 2020, 5:32 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் 477 பயனாளிகளுக்கு ரூ. 61 லட்சம் மதிப்புள்ள மிக்ஸி, கிரைண்டர், தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் வாழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒளி ஏற்றியுள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த முதலமைச்சரின் கடிதத்தை மீன்வளத் துறை அமைச்சர் டெல்லிக்கு நேரில் சென்று வழங்கியுள்ளார் என்றார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆர்.பி. உதயகுமார்

மக்களவையில் விஜய்க்கு ஆதரவாக திமுகவினர் பேசிய குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுகவினர் தாங்களாகவே சென்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்துவருவதாகவும் அதனை விஜய் ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பது குறித்து தனக்கு தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.

விவசாயிகளின் வாழ்வில் முதலமைச்சர் ஒளியேற்றியுள்ளார்- ஆர்.பி. உதயகுமார்

தொடர்ந்து பேசிய அவர், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை திமுகவினரால் பாராட்ட முடியவில்லை. அதனால் வருமானவரித் துறை சோதனை குறித்து மட்டும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘பாதுகாகப்பட்ட வேளாண் மண்டலம்’ அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

Intro:திமுகவினர் அவர்களாகவே சென்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவற்றை விஜய் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை அமைச்சர் ஆர்.பி உதயகுமார்பேட்டிBody:மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசு சார்பாக சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு 477 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சம் மதிப்புள்ள மிக்ஸி, கிரைண்டர், தையல், மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

*பின் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது*

தமிழக முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்து விவசாயிகளுக்கு வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார்.

இத்திட்டத்தினை சட்ட வல்லுனர்களின் அறிவுரையின் படி இதற்கான தனி சட்டங்கள் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனை தெளிவாக அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முக்கியத்துவத்தினை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் முதலமைச்சரின் கடிதத்தை டெல்லியில் உள்ள தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கியுள்ளார்.

*நாடாளுமன்றத்தில் திமுகவினர் விஜய்க்கு ஆதரவாக பேசியது குறித்த கேள்விக்கு*

திமுகவினர் அவர்களாகவே சென்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவற்றை விஜய் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆங்காங்கே வரும் தகவலின் அடிப்படையில் சில நடவடிக்கை எடுப்பது காலங்காலமாக நடத்து வரும் மரபு.

அதற்காக அரசியல் சாயம் பூசுவது திமுக நிலைப்பாடாக உள்ளது.

*நடிகர் ரஜினிக்கு ஆதரவாக விஜய்க்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுத்தது பற்றிய கேள்விக்கு*

இது குறித்து பேசுவதற்கு நான் விரும்ப வில்லை

டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததற்கு திமுகவினர் பாராட்ட முடியவில்லை ஆனால் வருமான வரி சோதனை குறித்து மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் திட்டத்திற்கு ஆதரவு அளித்து இதற்காக மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று திமுக கூறியிருந்தால் அவர்கள் விவசாயிகளுக்கு நண்பன், அதைப்பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தின் பேசாமல் அவர்களின் சுயநலத்திற்காக விஜய் பற்றி பேசுவது அவர்களின் சுயநலத்தை குறிக்கிறது.

*டெல்டா மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வழக்குகள் வாபஸ் வருமா என்ற கேள்விக்கு*

முதல்வர் விவசாயி என்பதால் கருணை உள்ளத்தோடு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அணுகுவார்.

*டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் கேள்வி குறித்து*

எனக்கு கருத்து சொல்லும் எல்லையானது தமிழகத்திற்குள் மட்டும் தான் உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.