ETV Bharat / state

உசிலம்பட்டியில் மறைந்த தா. பாண்டியனின் உடல் அடக்கம்!

author img

By

Published : Feb 27, 2021, 6:19 PM IST

மதுரை: உசிலம்பட்டி அருகேவுள்ள வெள்ளைமலைப்பட்டியில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தா. பாண்டியனின் உடல் அடக்கம்
தா. பாண்டியனின் உடல் அடக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் நேற்று (பிப்.26) சென்னையில் காலமானார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (பிப்.27) அதிகாலையில் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேவுள்ள வெள்ளைமலைப்பட்டி டேவிட் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தா. பாண்டியனின் உடல் அடக்கம்

அங்கு, அவரது உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன், திமுக சார்பில் தேனி மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், உசிலம்பட்டி 58 கிராம பாசன விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் மாலை அணிவித்தும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது உடலை டேவிட் பண்ணையிலுள்ள தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ‘சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர் தா.பா’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.