ETV Bharat / state

நில அளவையர் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வழக்கு ரத்து - madurai latest news

நில அளவையர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் பிறப்பிக்கப்பட்ட நில அளவை ஆணையரின் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்துசெய்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jul 31, 2021, 3:57 PM IST

மதுரை: கடந்த ஆண்டு நில அளவீடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, நவீன தொழில்நுட்பம், நவீன இயந்திரங்கள் மூலம் நில அளவீடு செய்ய வேண்டும். பணம் செலுத்திய 30 நாள்களில் நில அளவீடு செய்ய வேண்டும்.

தவறினால் கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும். நில அளவீட்டுக்குத் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். நில அளவீட்டுப் பணிக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நில அளவையர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றவில்லை என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர் யூனியன் பொதுச் செயலாளர் ராஜா, தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (ஜூலை 31) நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் வாதத் தரப்பை ஏற்றுக்கொண்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்தனர்.

மேலும் இதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட நில அளவை ஆணையரின் உத்தரவும் ரத்துசெய்யப்பட்டது.

இதையும் படிங்க: கடைகள் திறக்க அனுமதி இல்லை - வேதனையில் வியாபாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.