ETV Bharat / state

சாலையோரம் இறந்து கிடந்த நடிகர் - கமலுடன் நடித்தவருக்கு நேர்ந்த சோகம்..! - பெரிய ரத வீதி

கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த, துணை நடிகர் மோகன் திருப்பரங்குன்றம் பகுதியில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த துணை நடிகர் மோகன்

author img

By

Published : Aug 2, 2023, 6:57 PM IST

மதுரை: சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர் சின்னு என்பவரின் இளைய மகன் மோகன் (60). திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றியவர் இவர். கமல் ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப் படத்தில் கமலின் குள்ள அப்பு கதாபாத்திரத்தின் நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார்.

மேலும் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இறந்த துணை நடிகர் மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், வறுமையின் காரணமாக திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் துணை நடிகர் மோகன் இறந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள். காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து திருப்பரங்குன்றம் காவல் துறையினர் இறந்த மோகனின் உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பின் இறந்த துணை நடிகர் மோகனுடைய உடலை, காவல் துறையினர் இலவச ஆம்புலன்ஸ் மூலம், மோகனின் சொந்த ஊரான சேலத்தை அடுத்த மேட்டூருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யதுள்ளனர். கமலஹாசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களோடு படத்தில் நடித்த, ஒரு துணை நடிகர் இப்படி வறுமையின் காரணமாக, யாருமற்ற நிலையில் தெருவில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Cheetah : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு - என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.