மதுரை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜித்குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பளராகப் பணியாற்றி வந்தவர்.
இதையடுத்து மதுரை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணைக் காவல் ஆணையராகயிருந்த கார்த்திக் சென்னை பூக்கடை துணை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதனால் மதுரை சட்டம் ஒழுங்கு துணைக் காவல் ஆணையராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவபிரசாத் விருதுநகர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தவர்.
இதையும் படிங்க: மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்