ETV Bharat / state

சாதாரண பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை: நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன்

தங்களது கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் சாதாரண பயணிகள் வண்டிகளை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் நன்றி

author img

By

Published : Aug 20, 2021, 2:00 PM IST

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய ரயில்வே சாதாரண பயணிகள் வண்டிகளை இயக்காமல் இருப்பதால் அடித்தட்டு, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை சுட்டிக்காட்டி அவற்றை இயக்கிட ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். ரயில்வே அமைச்சரை நானும் வடசென்னை எம்.பி கலாநிதி வீராச்சாமியும் நேரில் சென்று வலியுறுத்தினோம்.

கோரிக்கையை பரிசீலித்த ரயில்வே வாரியம்

இப்போது ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள பயணிகள் வண்டிகளையும், பாரம்பரிய பழைய பயணிகள் வண்டிகளையும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும், அவற்றுக்கான கால அட்டவணைகளை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திடுமாறும் ரயில்வே அலுவலர்களைக் கோரியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் பயணிகள் போக்குவரத்து அலுவலர் தெற்கு ரயில்வே முழுவதுமுள்ள அனைத்து கோட்டங்களிலும் அதற்கான கால அட்டவணைகளை தயாரித்து அனுப்புமாறு கூறியுள்ளதன் அடிப்படையில் அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

விரைந்து பயணிகள் வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.