ETV Bharat / state

மதுரையில் இந்தாண்டில் 90 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - மதுரை செய்திகள்

2022-ஆம் ஆண்டில் மட்டும் 90 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக மதுரை மாநகர காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை; 90 பேர் குண்டர் சட்டத்தில் கைது

author img

By

Published : Dec 31, 2022, 9:30 PM IST

மதுரை: ஓராண்டில் மதுரை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதுரை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள 1,685 சரித்திர பதிவேடு ரவுடிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1,306 ரவுடிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 54 ரவுடிகளும், பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 37 ரவுடிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக குற்றச்செயல்களில் வழக்கமாக ஈடுபடும் 3,664 நபர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2,263 நபர்களிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டன.

அவர்களில் 126 பேர் பத்திர நிபந்தனைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் 2022ஆம் ஆண்டில் 90 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகளுக்கு எதிரான கடுமையான மற்றும் வலுவான நடவடிக்கையின் விளைவாக 2022ஆம் ஆண்டில் நடந்த 32 கொலைகளில், ரவுடிகளுக்கு இடையேயான பழிவாங்கும் கொலையோ அல்லது இனவாதக் கொலையோ நடக்கவில்லை.

மேலும் குடும்ப தகராறுகள், சுற்றுப்புறங்களில் சிறு சண்டைகள் மற்றும் தெரிந்த நபர்களுக்குள் பிற தகராறுகள் ஆகிய காரணங்களினால் மட்டுமே கொலை குற்றங்கள் நடந்துள்ளன. 2021ஆம் ஆண்டில் 35 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளன.

2022ஆம் ஆண்டில் 2 ஆதாய கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டு வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பதிவான 740 வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் ரூ.4.72 கோடி அளவுக்கு சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டன. அதில் 442 வழக்குகளை விரைவாகக் கண்டறிந்து ரூ.3.08 கோடி (65%) மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 177 பெரும் குற்ற வழக்குகளில் ரூ.2.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டன. அதில் 142 வழக்குகள் கண்டறியப்பட்டு ரூ. 2 கோடி (73%) மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டில் திருடு போன 106 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 821 மொபைல் போன்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில், 479 போதைப்பொருள் கஞ்சா விற்பனையாளர்கள் மீது 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வருடம் 7 கமர்சியல் வழக்குகள் உள்பட மொத்தம் 80 வழக்குகளில் தொடர்புடைய 89 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

51 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 70 நபர்களின் 121 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.1 கோடியே 11 லட்சம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4.5 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் 62 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் ஆகியவை நிரந்தர முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 531 விற்பனையாளர்கள் மீது சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.27 லட்சம் மதிப்புள்ள சுமார் 2,950 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காகவும், வைத்திருந்ததற்காகவும் 2,068 பேர் கைது செய்யப்பட்டு ரூ.61 லட்சம் மதிப்புள்ள சுமார் 4,900 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி மதுரை மாநகரில் காவல் நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் நல்லமுறையில் நடத்தப்படுவதை உறுதி செய்யவும், அவர்களது குறைகளை விரைவாக தீர்க்கவும், இவற்றை கண்காணிக்கவும் குறைதீர் முறை மற்றும் கண்காணிப்பு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள் மற்றும் அவர்களுடைய மனு விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவ்வாறு செய்யப்படும் பதிவுகள் உடனுக்குடன் மாநகர காவல் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, மதுரை மாநகரக் காவல் நிலையங்களில் இதுவரை 5,377 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 433 புகார் மனுக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 4,226 புகார் மனுக்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி புகார்தாரர்களில் 168 புகார்தாரர்கள் தவிர மற்ற அனைவரும் தங்கள் மனு மீதான காவல்துறையின் நடவடிக்கை திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்தார்கள். அதன்பேரில் மேற்படி 168 புகார்தாரர்களுக்கும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களின் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுரை மாநகர காவல்துறை நகரின் 3,035 முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 13,351 சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்து நகரம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் முக்கிய கோவில் வளாகங்கள், சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.