ETV Bharat / state

அணில் குஞ்சுகளை கைவிட்ட தாய்: பாலூட்டி வளர்க்கும் மருத்துவர்

மதுரை: தாயை இழந்து சாலையில் கிடந்த இரண்டு அணில் குஞ்சுகளை வீட்டிற்கு தூக்கி வந்து பாலூட்டி வளர்த்து உயிர்களின் மீதான தனது நேசத்தை வெளிப்படுத்தியுள்ளார் கால்நடை மருத்துவர் மெரில் ராஜ். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

squirrels saved and grown up by veterinary doctor in madurai

author img

By

Published : May 25, 2020, 8:42 PM IST

Updated : May 28, 2020, 12:42 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பாசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் மெரில் ராஜ். தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு மரத்திலிருந்து பிறந்து சில நாள்களே ஆன அணில் இரண்டு குஞ்சுகள் விழுந்து கிடப்பதைப் பார்த்து, அவற்றை தூக்கி வந்து வீட்டில் பாலூட்டி வளர்த்து வந்தார்.

கால்நடை மருத்துவர் என்பதால் கண்கூட திறக்காத அணில் குஞ்சுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, இங்க் ஃபில்லர் மூலமாகத் தொடர்ந்து பாலூட்டி அவற்றைக் காப்பாற்றிவிட்டார் மெரில் ராஜ். அணில் குஞ்சுகளும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ரோமங்கள் முளைத்து, சுறுசுறுப்பாக விளையாடத் தொடங்கின. அவை இரண்டுக்கும் ஆரோ, ஆம்பல் எனப் பெயரிட்டும் அழைத்து வந்தார்.

பாலூட்டி வளர்க்கும் மருத்துவர்

இந்நிலையில், அக்குஞ்சுகளை அதே மரத்தடியில் கொண்டுபோய் அதன் தாயிடம் சேர்த்தார். ஆனால் அக்குஞ்சுகளிடம் தாய் அணில் அவ்வளவு அக்கறை காட்டாத நிலையில், மீண்டும் மருத்துவர் மெரில் ராஜ் வீட்டைத் தேடி அணில் குஞ்சுகள் இரண்டும் அடைக்கலமாகிவிட்டன.

தற்போது வீட்டிற்குள்ளே ஆரோ, ஆம்பலோடு மருத்துவர் மெரில் ராஜ் வாழத் தொடங்கிவிட்டார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி மெரில் ராஜூக்கு பாராட்டை பெற்றுக்கொள்கிறது.

இதையும் படிங்க... சிட்டுக் குருவி வளர்க்க, இலவச கூடுகள் தரும் தன்னார்வ அமைப்பு!

Last Updated : May 28, 2020, 12:42 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.