ETV Bharat / state

ஆதரவற்ற நோயாளிகளுக்கு தனி வார்டு - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடக்கம் - ராஜாஜி மருத்துவமனை

ஆதரவற்ற நோயாளிகளை கவனிக்கும் பொருட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை
மதுரை
author img

By

Published : Dec 31, 2020, 3:38 PM IST

உறவினர்களால் கைவிடப்பட்டும், ஆதரவற்ற நிலையிலும் உள்ள நோயாளிகள் அண்மைக்காலமாக கவனிப்பாரின்றி உயிர் துறக்கும் வேதனையான சம்பவங்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிகழ்ந்துவரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது.

இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஆதரவற்ற நோயாளிகளை கவனிப்பதற்காக 25 படுக்கைகளுடன் கூடிய தனியாக வார்டை அமைத்துள்ளது. காவல்துறை துணை ஆணையர் லில்லி கிரேஸ், மருத்துவமனை முதல்வர் சங்குமணி ஆகியோர் இன்று (டிச.31) தொடங்கிவைத்தனர்.

இந்த வார்டில் உள்ள நோயாளிகளை தன்னார்வ அமைப்பினருடன் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து கண்காணிப்பர் என்றும், அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரூ.2 லட்சம்,7 சவரன் நகை இருந்தும் ஆதரவின்றி தவித்த மூதாட்டிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.