ETV Bharat / state

இந்தியாவின் ஆறுகோடி குறுந்தொழில் நிறுவனங்களை காப்பது மிக அவசியம்!

மதுரை: இந்தியாவில் உள்ள 6 கோடி சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை காப்பாற்றுவது மிகவும் அவசியம், இதனை நம்பி சற்றேறக்குறைய 18 கோடி தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது என்று மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின்(மடீட்சியா) தலைவர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

madurai
madurai
author img

By

Published : May 6, 2020, 9:13 AM IST

மதுரை மடீட்சியா அமைப்பின் தலைவர் முருகானந்தம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே சிறு மற்றும் குறுந்தொழில்கள் மிகக் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றன. ஐந்து தொழிலாளர்களைக் கொண்ட சிறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் வேலை நடைபெற்றால் தான் இயங்க முடியும். ஊரடங்கில் முதல் ஒருமாத காலத்தை ஓரளவிற்கு சமாளித்து விட்டனர். தற்போது மிகக் கடுமையான சவால் அவர்களுக்கு இருக்கிறது.

வறுமையின் பிடியில் இருந்து தப்பிப்பது கடினம்

கரோனாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தாலும், அடுத்து வரும் வறுமையின் தாக்குதலில் மீண்டு அடுத்த நிலைக்கு எவ்வாறு செல்லப் போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. சிறு, குறுந்தொழில்களுக்கு வரவேண்டிய மானியங்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இவை, முதலுதவியாக இருக்கும். இரண்டாவதாக எங்களது நடப்பு முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு 30 விழுக்காடு மானியத்தை வழங்க வேண்டும்.

மின்கட்டணத்தை ஆறுமாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும்

சிறு மற்றும் குறுந்தொழில்களில்தான் அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்த நேரத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் கூடும் என்றால் விரும்பத்தகாத சமூகச் சிக்கல்களுக்கு அவர்கள் தள்ளப்படும் நிலை உருவாகும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை.

இந்தியாவின் ஆதாரமாக இருக்கும் சிறு,குறு தொழில்கள்

சிறு தொழில் துறையின் உற்பத்தி, மொத்த உற்பத்தியில் 55% ஆகும். அதேபோன்று, இந்தியாவில் இயங்கக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்களுக்கு சிறு தொழில் உற்பத்தியே மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. எந்த அடிப்படையில் பார்த்தாலும் சிறு, குறுந்தொழில்களை புறக்கணிக்கவே முடியாது.

வங்கிகளில் சிறு நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை 6 மாத காலத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும். அதே போன்று, தவணைத் தொகையையும் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் சிறு மற்றும் குறுந்தொழில்கள் நிதிச் சுமையிலிருந்து விடுபட பேருதவியாக இருக்கும்.

இந்த ஒரு மாதம் சமாளித்துவிட்டோம்

மின் கட்டணத்தில் சிறு தொழில்களுக்கு என்று சிறப்புப் பிரிவு இல்லை என்றாலும் அவர்கள் வசூல் செய்கிற நிலை கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு வசூல் செய்யக்கூடாது. நிறுவனங்கள் இயங்காத காலக்கட்டத்திலும் அந்தத் தொகையை வசூல் செய்வது சிறுதொழில் நிறுவனங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: 'சொந்த ஊருக்குத் திரும்பாதீர்கள்' - புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கோவா சி.எம்., வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.