மதுரை: கரோனா தொற்று முதல் அலையின்போது ரயில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பிறகு சில முக்கிய விரைவு ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன.
தற்போது அந்த விரைவு ரயில்கள் வழக்கமான ரயில்களாகப் பழைய கட்டணத்துடன் இயக்கப்பட இருக்கின்றன. ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி சிறப்பு ரயில் எண்களின் முதல் இலக்கம் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும். இந்தச் சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக இயங்க இருப்பதால் பழைய வண்டி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பல ரயில்களுக்கு முதல் இலக்கம் மட்டும் மாறியது.
கட்டணம் குறையுது மக்களே
அந்த ரயில்களுக்கு முதல் இலக்கமான பூஜ்ஜியத்திற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு என்ற எண் மட்டும் மாற்றம்செய்யப்படுகிறது. சில ரயில்களுக்கு ஐந்திலக்கங்களும் மாற்றப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட ரயில்களுக்கான பழைய, புதிய எண், ரயில் வழித்தடம், ரயில் சேவை விவரங்கள் இதோ...
மாற்றப்பட்ட பழைய வண்டி எண் | ரயில் வழித்தடம் (இருமார்க்கத்திலும்) | ரயில் சேவை | மாற்றப்பட்ட புதிய வண்டி எண் |
06157/06158 | சென்னை - மதுரை - சென்னை | (வாரம் இருமுறை ) | 22623/22624 |
06011/06012 | கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி | திருக்குறள் விரைவு வண்டி | 12642/12641 |
06155/06156 | மதுரை - டெல்லி நிஜாமுதீன் - மதுரை | தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் | 12652/12651 |
06063/06064 | சென்னை - நாகர்கோவில் - சென்னை | சென்னை - நாகர்கோவில் வாராந்திர விரைவு வண்டி | 12667/12668 |
06019/06020 | சென்னை சென்ட்ரல் - மதுரை - சென்னை சென்ட்ரல் | (வாரம் மும்முறை ) | 20601/20602 |
06069/06070 | திருநெல்வேலி - பிலாஸ்பூர் - திருநெல்வேலி | வாராந்திர விரைவு வண்டி | 22619/22620 |
06071/06072 | திருநெல்வேலி - மும்பை தாதர் - திருநெல்வேலி | வாராந்திர விரைவு வண்டி | 22630/22629 |
06053/06054 | மதுரை - பிகானீர் - மதுரை | வாராந்திர விரைவு வண்டி | 22631/22632 |
02205/02206 | சென்னை - ராமேஸ்வரம் - சென்னை | சேது விரைவு வண்டி | 22662/22661 |
இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி