இது குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த குற்றவியல் துணை ஆணையர் பழனிகுமார் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவ பிரசாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் துணை ஆணையர் பழனி குமார் பேசுகையில், “கரோனா ஊரடங்கு தளர்விற்கு பின் கடந்த இரு மாதங்களில் குற்ற நடவடிக்கைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த ஒற்றைக்கண் பாண்டியராஜன் என்பவர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட வழிப்பறி கும்பல் செயல்பட்டும், அவருக்கு உதவியாக செயல்பட்ட பெண் வழக்கறிஞர் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் , “போதை பொருள்கள் விற்பனையை தடுக்க சிறப்பு காவல்படையை உருவாக்கி கண்காணித்து வருகின்றோம்.
கடந்த ஒரு வாரத்தில் மதுரை மாநகரில் நடைபெற்ற நான்கு கொலைகள் சொந்த பிரச்னைகளால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மேலும் குற்றச் செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
சிறார்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் திறந்தபின் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வட்டாட்சியர் முன்னிலையில் மயானத்தில் மறு உடற்கூறாய்வு!