ETV Bharat / state

தென்காசி வழியாக நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு - Southern Railway Notification

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் தென்காசி மற்றும் ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென்காசி- நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

author img

By

Published : Feb 17, 2023, 9:24 PM IST

மதுரை: மேட்டுப்பாளையத்திற்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து தென்காசி மற்றும் ராஜபாளையம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 1. ரயில் எண். 06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 06ஆம் தேதி 2023 முதல் ஜூன் 29, 2023 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து 7.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

2. ரயில் எண். 06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 07ஆம் தேதி 2023 முதல் ஜூன் 30, 2023 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

நிறுத்தங்கள்: சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி சந்திப்பு, போத்தனுார் சந்திப்பு, கோயம்புத்தூர்.

இந்த ரயிலில், இரண்டு ஏசி 3-அடுக்கு பெட்டிகள், ஒன்பது தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், இரண்டு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பில் லக்கேஜ்/பிரேக் வேன் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிட வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பெரியகுளம் சுற்றுவட்டாரங்களில் நெல் விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.