மதுரை : உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. அவை அனைத்தும் பேரையூர் தாலுகா அலுவலகத்தின் மூலம் மதுரையில் உள்ள அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவை அரசு அருங்காட்சியகம் காட்சிக் கூடத்தில் தற்காலிக பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறுகையில், "தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் மூலம் தமிழர்களின் தொன்மை நாகரிகம் உலகிற்கு வெளியே தெரியத் தொடங்கியுள்ளது ".
"மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு சிவப்பு பானைகள், குறியீடுகள் உள்ள பானைகள், பானை ஓடுகள், மண் குடுவைகள், இரும்பாலான வேட்டைக் கருவிகள், மீன் சின்னம், நூற்றுக்கணக்கான சூதுபவள மணிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்துள்ளன ".
இதையும் படிங்க :மதுரை மீனாட்சி கோயிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை