ETV Bharat / state

மகளுக்கு 2ஆவது திருமணம்: ரஜினிக்கு பெரியாரின் செயலை நினைவூட்டும் செல்லூர் ராஜு! - Selur Raju talks about Rajini

மதுரை: ரஜினி மீது தங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது என்றும், மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைப்பது போன்று பேசுவது தவறானது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Rajini
Rajini
author img

By

Published : Jan 24, 2020, 11:30 AM IST

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ”எப்பொழுதும் பொறுமையாகப் பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது.

செல்லூர் ராஜு - கூட்டுறவுத் துறை அமைச்சர்

மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்துப் பேசுவது தவறானது. ரஜினியின் மகளுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது; இது எல்லாம் அந்தக் காலத்தில் சாத்தியமில்லை. மதவழிப்பாட்டை நாங்களும்தான் பின்பற்றுகிறோம். ஆனால், பத்தாம்பசலித்தனமாகச் செயல்படக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: ‘யோக்கியர் என்றால் துக்ளக் ஆதாரத்தைக் காட்டியிருக்க வேண்டும்’ - கொளத்தூர் மணி காட்டம்

Intro:ரஜினி மீது எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜு

ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைப்பது போன்று பேசுவது தவறானது என அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் பேட்டிBody:ரஜினி மீது எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜு

ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைப்பது போன்று பேசுவது தவறானது என அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் பேட்டி

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது, முகாமினை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது,
மகாத்மா காந்தியை மறக்கக்கூடாது அவர் தான் முதலில் கிராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.

இன்று பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக, துணைத்தலைவர்களாக அமர்ந்திருக்கிறார்கள் அதற்கு முக்கிய காரணமான பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை மறக்க கூடாது என்றார்

மேலும் அவர், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழியை தமிழ்நாட்டில் இருந்தே அகற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவர் நமது முதல்வர் அதே போல கிராமப்புறங்களிலிருந்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்,

பிரதமரே காசோலையில் கையெழுத்திட முடியாது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் காசோலையில் கையெழுத்திட கூடிய அதிகாரம் உள்ளது., இந்த சட்டத்தை கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி அவரை நாம் மறக்கக் கூடாது, மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய நாம் அனைவரும் ஒத்துழைப்போடு உழைக்க வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித் அமைச்சர், எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன?,

துரைமுருகன் தான் திமுகவிற்கு தலைவராக வந்திருக்க வேண்டும் எங்களை குறை சொல்வதற்கு துரைமுருகனுக்கு எந்த அருகதையும் கிடையாது,

ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது, மாபெரும் தலைவரின் போராட்டத்தை... பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது,

திராவிட முன்னேற்றக் கழகம் இந்த விஷயத்தை பொறுத்தவரை நழுவிப் போய் கொண்டிருக்கிறது என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.