ETV Bharat / state

மதுரை-கொல்கத்தா வாராந்திர பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் - அஞ்சல் துறை மற்றும் ரயில்வேயின் கூட்டு சாதனை - railway news

மதுரையிலிருந்து கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையத்திற்கு வாராந்திர பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை காரணமாக சிறு குறு விவசாயிகள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பயனடைந்து வருகின்றன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 25, 2023, 8:32 PM IST

மதுரை: இந்திய ரயில்வே மற்றும் இந்திய அஞ்சல் துறையின் கூட்டு முயற்சியாக, மதுரை கூடல்நகர் மற்றும் கொல்கத்தா ஹவுரா சங்க்ரைல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே, அட்டவணைப்படுத்தப்பட்ட வாராந்திர பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 15 உயர் கொள்ளளவு கொண்ட பார்சல் வேன்களுடன் இயக்கப்படுகிறது.

வண்டி எண் 00661 கூடல்நகர் - சங்க்ரைல் பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் கூடல்நகரில் இருந்து அதிகாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மதியம் 13.00 மணிக்கு சங்க்ரைலைச் சென்றடையும். இந்த ரயில் சராசரியாக மணிக்கு 38.3 கிமீ வேகத்தில் 2,177 கிமீ தூரத்தை 57.15 மணி நேரத்தில் கடக்கும்.

மறு மார்க்கத்தில், வண்டி எண் 00662 சங்க்ரைல் - கூடல்நகர் பார்சல் எக்ஸ்பிரஸ், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சங்க்ரைலில் இருந்து இரவு 11.00 மணிக்குப் புறப்பட்டு, திங்களன்று காலை 01.30 மணிக்கு கூடல்நகர் வந்து சேரும். இந்த ரயில் 50.30 மணி நேரத்தில் 2,177 கிமீ தூரத்தை கடக்கும். இந்த ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 43.11 கிமீ ஆகும்.

இரு மார்க்கத்திலும் இவ்விரண்டு ரயில்களும் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தாம்பரம், கூடூர், விஜயவாடா, குடிவாடா, அக்கிவிடு, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, பாலசூர், காரக்பூர், பன்ஸ்குரா மற்றும் மெச்செடா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரை கோட்ட எல்லைக்குள் உள்ள வணிகர்கள், வாடிக்கையாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விரைவாக கொல்கத்தா பகுதிக்கு அனுப்ப முதன்மை வணிக ஆய்வாளர்கள் ஏ.ஜே.ஜெயச்சந்திரன் (90038 62954), பி.கே.மார்த்தாண்டன் (98437 88825), அஞ்சல் துறை வர்த்தக அலுவலர் ஜே.ஜெயக்குமார் (81221 32256) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இந்திய அஞ்சல் மற்றும் ரயில்வேயின் உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்து, சிறு விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உற்பத்தி பொருட்களை கொண்டு சேர்க்க தடையற்ற மற்றும் திறமையான வழிமுறையை வழங்குவதை இந்திய ரயில்வே இலக்காகக் கொண்டுள்ளது. ஆகையால் இதனை வணிகர்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.