ETV Bharat / state

மதுரையில் கி.பி 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு!

author img

By

Published : Nov 25, 2022, 1:20 PM IST

மதுரை அருகே கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

stone sculpture  archaeology  sixteenth century stone sculpture  madurai  madurai news  madurai latest news  stone sculpture found in madurai  நடுகல் சிற்பம்  16ஆம் நூற்றாண்டு நடுகல் சிற்பம்  மதுரையில் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு  கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம்  பழமையான சிற்பம்  சிற்பம்  ஆண் மற்றும் பெண் சிற்பம்  தொல்லியல்  மதுரை  துரை சரசுவதி நாராயணன் கல்லூரி
கிபி 16ஆம் நூற்றாண்டு நடுகல் சிற்பம்

மதுரை: மோதகம் கரையாம்பட்டியை சேர்ந்த பூசாரி முத்துசாமி என்பவர் தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்படி, மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில், பேராசிரியர் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன், தமிழ் செல்வம் ஆகியோர் திருமங்கலம் மோதகம் கரையாம்பட்டி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.

நடுகல் சிற்பம்: அப்போது, கிபி 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கற்சிற்பம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது, "பாண்டியர் காலத்தில் செங்குடி நாட்டின் எல்லைக்குட்பட்ட மோதகம் வேளாண்மை, வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று விளங்கியது. இவ்வூரில் பல வரலாற்றுத் தடயங்கள் புதைந்த நிலையில், அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரையாம்பட்டி, தாதமடம் போன்ற நான்கு கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் தற்போது இருக்கிறது.

சங்ககாலம் முதல் தமிழ் சமூகத்தில் நடுகல் மரபு இருந்து வருகிறது. காவல் தெய்வமாகவும் வழிபடப்படுவதும் வழக்கமாக உள்ளது. திருமங்கலம் ராஜபாளையம் பிரதான சாலையில் கரையாம்பட்டி விலக்கின் வடக்கு திசையில் முட்புதரில் எழுத்துகள் கொண்ட நடுகல் கண்டறியப்பட்டது. மூன்று வரி கொண்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதில், "வாணன், உட்பட்ட" என்ற வரியைத் தவிர மற்ற எழுத்துக்கள் முற்றிலும் தேய்மானத்தோடு காணப்பட்டதால் பொருள் அறியமுடியவில்லை.

உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன்

ஆண் மற்றும் பெண் சிற்பம்: நடுகல் நான்கு அடி உயரம் 2 அடி அகலம் கொண்டது. நடுகல்லில் ஒரு ஆண், பெண் சிற்பம் வலது காலை மடித்து இடது காலை நீட்டி அமர்ந்த கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இருவரும் விசிறி வடிவில் ஐந்து மடிப்பு தொங்கும் விரிப்பின் மீது அமர்ந்துள்ளனர். ஆண் காலில் அணிந்திருக்கும் கழல் அவனது வீரத்தை பறைசாற்றுகின்றது. அவனது காலை ஒட்டி வலது கையில் பிடித்துள்ள வாள் தரையை உரசிய வண்ணம் உள்ளது.

இடுப்பிலிருந்து கழல் வரை இறுக்கமான ஆடை, இடுப்பில் கச்சையும் அணிந்துள்ளான். ஒட்டிய வயிற்றில் மடிப்பு, விரிந்த மார்பு, கழுத்தை ஒட்டி பதக்கம், நீண்ட காதை வளர்த்து காதணியும், இறுக்கமான முகத்தில் மீசை கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டை பகுதியில் சற்று சரிந்த நிலையில் கொண்டை அவிழ்ந்து விடாமல் இறுக்கிக் கட்டி முடிந்துள்ளது.

பெண் சிற்பம் ஆணின் வலது பக்கம் அமர்ந்து தன்னுடைய தலைக்கு இணையாக இடது பக்கத்தில் பெரிய கொண்டை அலங்காரத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. முகம் தேய்ந்த நிலையில் ஒட்டிய வயிறு, பாதம் வரை ஆடையும் அணிந்துள்ளார். இச்சிற்பம் வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

கபோதத்துடன் கூடிய மூன்று நாசிக் கூடுகள் அழகான தோரணை வாயில் கொண்டு உள்ளது. சிற்பத்தின் எழுத்து வடிவம் மற்றும் உருவ அமைப்பை பொறுத்தமட்டில் கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் என்று கருதலாம். இச்சிற்பத்தை பார்க்கும்போது இப்பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்த குறுநில மன்னர் பரம்பரை சேர்ந்தவராக இருக்கலாம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு: திமுகவினர் தாக்கியதாக பாஜக நிர்வாகி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.