சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தை போன்றவர் என அவரிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே கூறியுள்ளார். கடந்த வாரம் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவரது மனைவி சாய்ரா பானு ஜோடி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பிரிவதாக அறிவித்தனர்.
மேலும் இந்த சமயத்தில் தங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு பதிவிட்டிருந்தார். இதனிடையே ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே தனது கணவர் மார்ஷ் ஹார்ட்சச்சும்-ஐ பிரிவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து குறித்து தவறான கருத்துக்கள பரவியது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சாய்ரா பானு ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
#MohiniDey - " a.r.rahman sir is the legend, he is just like a father to me " pic.twitter.com/cH2tlLxDt3
— A.R.Rahman Loops (@ARRahmanLoops) November 25, 2024
இதுமட்டுமின்றி தனக்கு எதிரான அவதூறு செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக்கலைஞர் இந்த விவகாரத்தில் வீடியோ ஒன்றை வெலியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ நான் ஒரு சில விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் தந்தையை போன்ற மனிதர்களும், பல ரோல்மாடல்களும் உள்ளனர்.
எனது கரியரின் வளர்ச்சியில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை விட சிறியவர். அவரது மகளுக்கு என் வயது இருக்கும். எனக்கு ஏ.ஆர்.ரகுமான் மீது பெரும் மரியாதை உள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன் வெளியான கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட பாடல்... இணையத்தில் வைரல்!
நான் ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் இசைக் கலைஞராக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளேன். கடைசி 5 வருடமாக நான் அமெரிக்காவில் பாப் இசைக் கலைஞருடன் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு சொந்தமாக இசைக்குழு உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் பற்றி பரவும் வதந்திகள் காயப்படுத்துகின்றன. ஒருவரது தனியுரிமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”. என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்