ETV Bharat / state

சிவகங்கை மணல் திருட்டு வழக்கு: மணல் திருட்டை தடுக்கும் குழு பதிலளிக்க உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் கானூர் கிராமத்தில் நடைபெற்ற மணல் திருட்டு சம்பவத்தின்போது தாலுகா அளவிலான மணல் திருட்டை தடுக்கும் குழு என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து பதிலளிக்க உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jul 15, 2020, 11:13 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த சிவா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அருகே உள்ள கானூர் கிராமம் உள்ளது. இதை சுற்றிலும் திருப்புவனம் தூதை திருப்பாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. வைகை ஆற்றின் கரையோரம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தின் அருகில் உள்ள வைகை ஆற்றிலும், வைகை ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாடு ஆகியப் பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடைபெறுகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது.

இதனால் இந்த பகுதியில் விவசாயம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த மணல் திட்டை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்களையும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

24 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணல் திருடப்பட்டுள்ளது. இதற்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நடைபெறாது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் மணல் திருட்டு நடைபெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. எனவே இந்த மணல் திருட்டு நடைபெற்றபோது அங்கு உள்ள மாவட்ட அளவிலான தாலுகா அளவிலான மணல் திருட்டை தடுக்கும் குழு என்ன செய்தார்கள். மேலும் அவர்கள் எந்த அனுமதிச் சீட்டின் அடிப்படையில் மணலை கடத்தி சென்றனர் என்பது குறித்தும், இவ்வழக்கில் பொதுப்பணித்துறை செயலாளர், தொழிற்சாலை தொழிலாளர் நலத்துறை செயலாளர் வருவாய்த்துறை செயலாளர், சிவகங்கை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.