ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு: மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு 2 வாரம் சிறை தண்டனை! - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அலுவலர் (DEO) சாமி சத்தியமூர்த்திக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுமார் 2 வார சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Contempt of court
நீதிமன்ற அவமதிப்பு
author img

By

Published : Aug 1, 2023, 1:53 PM IST

மதுரை: சிவகங்கை உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி (சென் ஜோசப்) சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு உதவி பெறும் எங்கள் பள்ளியில் ஆசிரியர் காலி பணியிடத்தை கருத்தில் கொண்டு ஒரு ஆசிரியர் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமனம் செய்யபட்டது.

இந்த நியமனத்திற்கான அங்கீகாரம் வழங்க கோரி மாவட்ட கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தோம். ஆனால் எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் (DEO) உத்தரவை ரத்து செய்து ஆசிரியைக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி செய்ததற்கான ஊதியத்தை கணக்கிட்டு பண பலன் வழங்க உத்தரவிட கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆசிரியை பணி நிரந்தரம் மற்றும் பண பலன்களை வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு நீதிமன்றம் எந்த தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை.

எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2019 ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், "நீதிமன்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி வேண்டுமென்றே நிறைவேற்றவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாக நீதிமன்றம் கருதுகிறது. மேலும் மாவட்ட கல்வி அதிகாரி தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோறியுள்ளார்.

அப்படி இருந்த போதும் வழக்கின் உண்மை தன்மையை கருத்தில் கொண்டு அவரது மன்னிப்பு ஏற்கக் கூடியதாக இல்லை. எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் இரண்டு வார சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளான அதிகாரியின் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் தண்டனையை தற்போது நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்ததால், விதிக்கப்பட்ட தண்டனை 2 வாரத்திற்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "இன்சூரன்ஸ் முதிர்ச்சி.. உடனே பணம் செலுத்துங்கள்" என பல லட்சம் மோசடி: பலே கில்லாடி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.