மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் முழுவதிலும் உள்ள பிரதான சின்னங்களை மேம்படுத்தும் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளையும் அழகுபடுத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு முதற்கட்டமாக வடக்குச் சித்திரை வீதியில் ஒரு பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வட்டவடிவிலான கோப்பில் வகை கற்களை பதிப்பதற்கு பணிகள் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக மழையின்போது மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழை நீர் தேங்கி இருந்தாது அதனால் கோயிலுக்குள் தேங்கும் மழைநீரை வடிகால் வாய்க்கால்கள் மூலம் வெளியேறும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அதன்பிறகு அழகிய கற்கள் மூலம் அழகுப்படுத்த இருப்பதாகவும், இந்த திட்டத்திற்காக சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீரை வெளியேற்ற வாய்க்கால்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், அதன்பிறகு அழகிய கற்கள் மூலம் அழகுப்படுத்த இருப்பதாகவும், இந்த திட்டத்திற்காக சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.