ETV Bharat / state

உதவி ஆய்வாளர்  தேர்வு முறைகேடு: வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

மதுரை: கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், அதனை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வருகிற 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
madurai highcourt
author img

By

Published : Jul 27, 2020, 8:14 PM IST

விருதுநகரை சேர்ந்த காளீஸ்வரி உள்ளிட்ட ஐந்துபேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு , சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த 8.3.2019 வெளியானது . எழுத்து தேர்வு , உடல் தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது .

கடந்த ஜனவரி 12,13 ஆகிய தேதிகளில் எழுத்துத்தேர்வு நடந்தது . எழுத்துத்தேர்வின் முடிவுகள் மார்ச் 16ஆம் தேதி வெளியானது. இதில் ஒரே தேர்வு மையத்தில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை.

தேர்ச்சி பெற்றவர்களில் 144 பேர் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுள்ளனர் . இவர்களில் பெரும்பாலானோருக்கு தொடர்ச்சியான வரிசையான எண்கள் வழங்கப்பட்டுள்ளன .

969 காலிப்பணியிடங்களுக்கு ஒரே பயிற்சி மையத்தில் 144 பேர் தேர்வு ஆகியுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததை போல் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. இத்தேர்விலும் முகவரியை மாற்றிக் கொடுத்து வெளிமாவட்டங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.

எனவே , காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இதற்காக நடந்த எழுத்துத் தேர்வு செல்லாது என அறிவித்து, புதிதாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார் .

இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் தரப்பில் வாதாடுகையில், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை. மேலும் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. எனவே நடந்து முடிந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, இதே போன்ற கோரிக்கையுடன் இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 31 ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.