ETV Bharat / state

மீனாட்சி கோயிலில் இயங்கிவந்த நான்கு கடைகளுக்கு சீல்! - madurai district news

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலின் வளாகத்தில் இயங்கிவந்த 4 கடைகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் சீல்வைக்கப்பட்டது.

மீனாட்சி
மீனாட்சி
author img

By

Published : Oct 15, 2020, 11:04 AM IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கிவந்தன. இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கோபுர வாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயிலுக்குள் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் முழுவதும் எரிந்து நாசமானது.

இதைத்தொடர்ந்து கோயிலுக்குள் இயங்கிவந்த அனைத்துக் கடைகளையும் மூடுவதற்கு கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடை உரிமையாளர்கள் இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால் அதற்கு இடையில் கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது கோயில்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டதால் இந்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் கோயில் அலுவலர்கள் முதல்கட்டமாக நான்கு கடைகளுக்கு புதன்கிழமை சீல்வைத்தனர்.

இது தொடர்பாக இணை ஆணையர் செல்லத்துரை கூறும்போது, ”கோயிலில் உள்ள கடைகளை அகற்ற ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடை உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள கடைகளுக்குச் சீல்வைக்கப்பட்டு-வருகிறது. மேலும் புதுமண்டபத்தில் இயங்கிவரும் கடை உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை முதல் தொடங்கும் நவராத்திரி விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.