ETV Bharat / state

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி.. உதவித்தொகை வழங்காத நிலையில் 6% வட்டியுடன் வழங்க நீதிமன்றம் உத்தரவு! - high court madurai bench

Sexual harassment compensation case: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு வருட காலமாக உதவித்தொகை வழங்காததால் 6 விழுக்காடு வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும் என உள்துறைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:26 PM IST

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த டிசம்பர் 2020ஆம் ஆண்டு எங்களது பகுதியில் வசிக்கக்கூடிய நவர் எனது 7 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சிறப்பு வழக்கில் அவரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டு குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஒரு லட்சத்தை ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு வழங்க மார்ச் 2022ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்துறை செயலருக்கு நாங்கள் மனு அனுப்பினோம்.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வறுமையில் வாடும் எனது குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவின்படி ஒரு லட்சம் ரூபாயை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று (செப்.22) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் ரீதியான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்க அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, “போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்து ஒரு வருட காலமாகியும் இதுவரை உதவி தொகை வழங்கவில்லை என்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 விழுக்காடு வட்டியுடன் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.

மேலும் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் செய்த உள்துறைச் செயலாளருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த 10 ஆயிரம் ரூபாய் அபராத தொகையையும் சேர்த்து சிறுமிக்கு வழங்க வேண்டும்” என கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: நிதி மோசடி வழக்கு; முதலீடு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.