ETV Bharat / state

சென்னகரம்பட்டி தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு! - சென்னகரம் பட்டி தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யக்கோரி மனு

மதுரை: மேலவளவு அருகே உள்ள சென்னகரம்பட்டி பஞ்சாயத்து தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவுசெய்ய கோரிய வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

sennagaram panchayat election petition in Madurai high court
sennagaram panchayat election petition in Madurai high court
author img

By

Published : Dec 21, 2019, 8:23 AM IST

மதுரை சென்னகரம்பட்டியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் தான் சென்னகரம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்காகப் போட்டியிடுவதாகவும் தனக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 1992ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த மோதலில் அம்மாசி, வேலு ஆகிய இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தேர்தலில் நடந்த மோதலில், 1997ஆம் ஆண்டு பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முருகேசன் உள்பட ஏழு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் குறிப்பிட்டார். இதுபோன்றே தனது பகுதி முழுவதும் பதட்டமானதாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், பெரும்பான்மையாக இருக்கக் கூடிய குறிப்பிட்ட பிரிவினரால் உள்ளாட்சித் தேர்தலின்போது அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்தார்.

அதனால் தங்கள் பகுதியில் நடக்கும் வேட்புமனு தாக்கல், பரப்புரை, வாக்குப்பதிவு, முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும் எனவும் இதே போல தேர்தல் முடிவுகளை மாலை ஆறு மணிக்கு மேல் அறிவிக்கக்கூடாது எனவும் அம்மனுவில் கூறியிருந்தார். தங்கள் பகுதியில் கூடுதல் காவல் துறைப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

உயர் நீதி மன்ற மதுரைக் கிளை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, மனு குறித்து தேர்தல் ஆணையம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் காலமானார்!

Intro:மதுரை மேலவளவு அருகே உள்ள சென்னகரம் பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும், கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.Body:மதுரை மேலவளவு அருகே உள்ள சென்னகரம் பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும், கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சென்னகரம்பட்டியை சேர்ந்த அப்துல் காதர் தாக்கல் செய்துள்ள மனுவில்

" நான் சென்னகரம் பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறேன். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் எங்கள் பகுதி முழுவதும் பதட்டமானவையாகும்.
எங்கள் ஊரான சென்னகரம்பட்டியில் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த மோதலில் கடந்த 1992ம் ஆண்டு அம்மாசி, மற்றும் வேலு ஆகிய 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

அதே போல் .எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் நடந்த மோதலில், கடந்த 1997ம் ஆண்டு, அங்கு பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட முருகேசன் உட்பட 7 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இது போன்றே எங்கள் பகுதி முழுவதும் தற்போதும் பதட்டமானவையாகவே உள்ளது.

இதனால் பெரும்பான்மையாக வசிக்க கூடிய குறிப்பிட்ட பிரிவினரால் உள்ளாட்சி தேர்தலின் போது அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழல் உள்ளது.

அதனால் எங்கள் பகுதியில் நடக்கும், மனுத் தாக்கல், பிரசாரம், வாக்குப்பதிவு, முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இதே போல தேர்தல் முடிவுகளை மாலை 6 மணிக்கு மேல் அறிவிக்க கூடாது. மேலும் எங்கள் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா
மனு குறித்து தேர்தல் ஆணையம் , மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.