கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்திந்தார். அப்போது பேசிய அவர், ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்திருப்பது அவரது ரசிகராக இருக்கிற காரணத்தால் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோல், இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் எல்லாம் அரசியலுக்காக தானே தவிர உண்மை அல்ல என்று குறிப்பிட்ட அவர், வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் முழுமையான வெற்றிபெறுவோம் என்றும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, இடைத்தேர்தலில் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெறவைத்துள்ளதாகவும், வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் தங்களுக்கு வெற்றி அளிப்பார்கள் என்பதில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர்கள் மாற்றம் என்பது முதலமைச்சரின் கையில் உள்ளதாகவும், அவர் எப்போது நினைத்தாலும் அமைச்சர்களை மாற்றிவிடக்கூடிய அதிகாரம் அவரிடம் இருப்பதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.