தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக வேட்பாளர் மீது ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசியஅவர், அதிமுக வேட்பாளர் மீது திமுக காலத்தில் போடப்பட்ட வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வந்துள்ளது.
குற்ற வழக்கு வேட்பாளர் மீது இருந்தால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். மு.க.ஸ்டாலின் பதவி வெறியில் இருக்கிறார். எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்று எண்ணத்தோடு இருக்கிறார். தேர்தலுக்காக எதாவது பொய்யான விஷயங்களை மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார்.
2015 , 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது, எத்தனை முதலீடுகள் வந்துள்ளன, எத்தனை தொழில்துறை ஆரம்பித்துள்ளார்கள் என்பது பற்றியெல்லாம் ஸ்டாலினுக்கு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அதுபோலதான் ஸ்டாலினும்.
மேலும் நாங்குநேரி தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்தத் தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதிமுக அந்த தொகுதியில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
எனவே அந்தத் தொகுதி மக்கள் அதிமுக வேட்பாளரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து மாபெரும் வெற்றியடையச்செய்வார்கள். அதிமுக வெற்றியென்பது உறுதி செய்யப்பட்ட வெற்றி " என்றார்
இதையும் படிங்க: 'ஆட்சி மாறும் மறுநாளே முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி'