ETV Bharat / state

‘தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் சிக்கல் இருப்பதாக சேகர்பாபு கூறினார்’ - மனம் திறந்த பெ.மணியரசன் - தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர்

தமிழில் குடமுழுக்கு நடத்தினால் எங்களை இந்து விரோத அரசு என்கிறார்கள். ஆகையால் இதனைச் செய்வதில் சிக்கல் உள்ளது. எங்களால் முடியாது என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்ததாக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 30, 2023, 7:13 PM IST

தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மதுரை வந்திருந்தார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக அவர் சிறப்பு நேர்காணல் அளித்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த ஜனவரி 27ஆம் தேதி பழனி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு, அதற்கு முன்பாக நடைபெற்ற வேள்விச்சாலை, கருவறை சிறப்பு பூஜைகள் ஆகியவற்றிலெல்லாம் முழுமையாகத் தமிழ் வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இருமுறை வழங்கிய தீர்ப்புகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு தமிழ் பாதி, சமஸ்கிருதம் பாதி என நடத்துங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். அந்த முறையில் அங்கே நடைபெறவில்லை. மேற்கண்ட மூன்று இடங்களிலும் சமமாக தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வழிபாடு நடைபெற்றிருக்க வேண்டும். நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டின் கடைசியில் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் வழக்கில் வழங்கிய தீர்ப்பிலேயே முதன்மைப் பாதி தமிழுக்கு என்று குறிப்பிட்டுள்ளனர். அடுத்த பாதி தான் சமஸ்கிருதத்திற்கு எனவும் கூறியுள்ளனர்.

இதற்காக நாங்கள் முன்கூட்டியே கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனிடம் நேரடியாக தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களோடு சென்று மனு அளித்தோம். உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் சரிபாதி இடம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். இதுவரை நடைபெற்ற மற்ற குடமுழுக்குகளிலும் தீர்ப்புக்கு விரோதமாகவே நடைபெற்றுள்ளன என அவரிடம் குறிப்பிட்டோம்.

அதற்கு குமரகுருபரன், புதிதாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை வந்தபிறகு செய்வோம். தற்போது செய்ய இயலாது என மறுத்துவிட்டார். இரண்டு முறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்கு யாரேனும் தடை விதித்து புதிதாக தீர்ப்பு வழங்கியுள்ளார்களா? இதற்கு குழு போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? எனக் கேள்வி எழுப்பினோம். ஆனால், அதற்கு அவரிடம் பதில் இல்லை. மாறாக எங்களிடம் பக்குவக்குறைவோடு நடந்துகொண்டார்.

பிறகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவையும் சந்தித்து பேசினோம். தமிழில் குடமுழுக்கு நடத்தினால் எங்களை இந்து விரோத அரசு என்கிறார்கள். ஆகையால், இதனைச் செய்வதில் சிக்கல் உள்ளது. எங்களால் முடியாது எனப் பதிலளித்தார். ஒரு தரப்பாரின் மேலாதிக்கக் கருத்துக்கு இவர்கள் மதிப்பளித்து பயப்படுகிறார்கள். அதன்பொருட்டு, நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள். நாங்களாக செய்ய முடியாது என சேகர் பாபு பதிலளித்தார்.

ஏற்கனவே இரண்டு முறை தீர்ப்பு வந்த பிறகு, மீண்டும் புது வழக்கு தொடுக்க எங்களுக்கு விருப்பமில்லை. தெய்வத்தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவராக தொடுத்த வழக்கில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர், தமிழில் தான் மேற்கொள்வோம் என்ற உறுதியின் காரணமாக நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர். ஜனவரி 30ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி பழனியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றோம். அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள். அதனை மீறி ஆர்ப்பாட்டம் செய்தோம். அந்த வழியாகச் சென்ற அமைச்சர் சேகர் பாபு எங்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு எங்களை காவல் துறையினர் கைது செய்யவில்லை. அச்சமயம் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, ’தமிழில் நடத்துவோம் என்று சொல்லிவிட்டு தமிழில் உள்ள அழைப்பிதழைக் காட்டினார்.

இதுபோன்ற மேனாமினுக்கி வேலையை செய்வது திராவிடத்திற்குப் பழக்கப்பட்டுப்போன ஒன்றாகும். உள்ளே ஒன்றுமிருக்காது. ஆனால், வெளி ஒப்பனை பிரமாதமாக இருக்கும். இதுதான் திராவிட மாடல். அழைப்பிதழில் நன்னீராட்டு விழா என்று அச்சிட்டால் மட்டும் போதாது. அந்த நன்னீராட்டை தமிழ்மொழியில் நடத்த வேண்டுமல்லவா? வேள்விச்சாலையில் 90 குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குண்டத்திலும் பிராமணர்கள் அமர்ந்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி சரி பாதி குண்டங்களில் தமிழ் அர்ச்சகரை உட்காரவைத்து தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டியபோது முடியாது என்று மறுத்துவிட்டார்கள். ஓதுவார்களைக் கொண்டு வந்து தமிழில் தேவாரம், கந்தரலங்காரம் ஆகியவற்றைப் பாடச் சொல்லி தமிழில் அர்ச்சனை நடைபெறுவதுபோன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கினார்கள்.

அதுபோல குடமுழுக்கின்போது இரண்டு ஓதுவார்களை மேலே ஏற்றி பாட வைத்தார்கள். அவ்வளவுதான். இவையனைத்தும் ஏமாற்றுவேலை, நடைமுறையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை இவர்கள் செயல்படுத்தவில்லை. அக்ரஹாரம் தமிழுக்கும் தமிழருக்கும் எதிராகக் கடைப்பிடிக்கும் தீண்டாமையை திராவிட மாடல் அரசு ஆதரிக்கிறது; வலுப்படுத்தியிருக்கிறது. பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் முழுவதுமாக அரங்கேற்றப்படவில்லை.

அவர்கள் செய்த இந்த ஒப்பனை வேலைகூட நாங்கள் செய்த போராட்டத்தின் பலனாகும். இந்த விசயத்தில் தெய்வத்தமிழ்ப் பேரவை உள்பட நாங்கள் எள்ளளவும் திருப்தி அடையவில்லை. இதையாவது செய்தார்களே என்பது கையலாகாதவர்களின் எண்ணம். தமிழ் தீண்டத்தகாத மொழியாகவும், தமிழ் அர்ச்சகர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அக்ரஹாரம் கடைப்பிடிக்கும் தீண்டாமைக் குற்றத்திற்கு ஸ்டாலின் அரசு உடந்தையாக இருக்கிறது; அரங்கேற்றியிருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: தலித் மக்களை ஆபசமாக பேசிய திமுக நிர்வாகி வீடியோ.. கட்சித் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.