ETV Bharat / state

பாஜக அரசின் ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கமாட்டார் - சீமான் - மதுரையில் சீமான் பரப்புரை

தமிழ்நாடு ஆளுநர் பாஜக, ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் நீட் தேர்விற்கு எதிராகச் செயல்படமாட்டார். அதுதான் அவர்களது கோட்பாடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

tamil nadu governor seeman campaign seeman criticize about tamil nadu governor seeman criticize about neet exam neet exam ஆளுநரை விமர்சித்த சீமான் பாஜகாவை விமர்சித்த சீமான் மதுரையில் சீமான் பரப்புரை சீமான் பேச்சு
சீமான்
author img

By

Published : Feb 7, 2022, 6:21 AM IST

மதுரை: ஒத்தக்கடை பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவருக்கான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்பதால் பதவிகளுக்குப் பேரம்தான் நடைபெறும். திமுக ஆளும்கட்சி ஆனவுடன் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்கின்றன. திமுக சின்னத்தில் நின்ற மதிமுக எப்படி தனிக்கட்சி ஆகும்.

திமுக எங்களைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் எங்கள் கட்சியிலிருந்து திமுகவிற்கு சென்றால் மட்டும் பிரமாண்டமாகப் பேசுகின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

விரும்பியதை அடைய முடியாத நிலை

தமிழ்நாடு ஆளுநர் பாஜக, ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் நீட் தேர்விற்கு எதிராகச் செயல்பட மாட்டார். அதுதான் அவர்களது கோட்பாடு. ஆளுநர் சட்டப்படி செயல்படுகிறார் என்ற ஓபிஎஸ்ஸின் கருத்துக்குப் பதிலளித்தபோது, அதிமுக பாஜகவுடன் உள்ளாட்சியில் கூட்டணி இல்லை என்றாலும், பாஜகவை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதால் பாஜகவை நயந்து பேசுகிறார்கள்.

நாட்டில் விரும்பிய கல்வி, விரும்பிய உணவு, விரும்பிய ஆடை அணிய முடியாத நிலை உள்ளது. இந்த நாட்டில் பிறந்ததைத் தவிர என்ன பாவம் செய்தோம் என்கிற நிலையில் உள்ளோம். நீட் தேர்வால் பாதிப்பு நடைபெற்றுவருவதைப் பாதிப்பே இருக்காது என்று சொல்வதுதான் பாஜகவின் கொள்கை.

பாஜகாவை விமர்சித்த சீமான்

சிக்கிக்கொண்ட நாடு

சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாத பாஜகவிடம் நாடு சிக்கிகொண்டுவிட்டது. ஏழரை ஆண்டுகளில் அதானியை இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆக்கியதே பாஜகவின் சாதனை.

மதம் ஒன்றைத் தவிர பாஜக எதைப் பற்றியும் பேசுவதில்லை, பாஜக அரசு எந்தச் சாதனையும் செய்யவில்லை. நெய்யை எரிப்பது, பாலை கொட்டுவது, மாட்டு மூத்திரத்தை குடிப்பது இங்கு மட்டுமே நடைபெறுகிறது. ஐந்து மாநிலத் தேர்தலுக்காக வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது பாஜக அரசு” என்றார்.

வெட்கமாக இல்லையா?

இதையடுத்து, சீமானிடம், தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடுசெய்யவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குச் சீமான் பதிலளித்ததாவது, “நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை முழுமையாக ஒதுக்கிவிட்டது. தமிழர்களைப் பார்த்தால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்குப் பிடிக்கவில்லையே, அப்புறம் ஏன் எங்களது பணம் தேவைப்படுகிறது. எங்களது பணத்தைத் தின்பது வெட்கமாக இல்லையா, நாடாளுமன்றத்தில் தமிழில் தம்பிதுரை பேசும்போது ஊளையிட்டு இழிவுபடுத்துகின்றனர்” என்றார்.

பின்னர், தமிழ்நாட்டை பாஜக ஆள முடியாது என்ற ராகுல் காந்தியின் பேச்சு குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டை பாஜக எப்போதும் ஆளாது. அதேபோன்று காங்கிரசும் ஆளாது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாஜக ஆளும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவரானதால், தொண்டர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார். நாம் தமிழர் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவோம், 2026லும் தனித்தே நிற்போம்” என்றார்.

சைக்கில் ஓட்டுவதும், டீ குடிப்பதும்தான் அரசியல்

சமூகநீதி கூட்டமைப்புத் தொடர்பான ஸ்டாலினின் கடிதம் குறித்த கேள்விக்கு, “ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு அழைப்புவிடுப்பதன் மூலம் அகில இந்திய தலைவராக முயற்சிக்கின்றார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதி பேசுவது அயோக்கியத்தனம். சாதிவாரி கணக்கெடுக்க திமுக அரசுக்குத் துணிவு இருக்கிறதா, இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சை போடுகிறீர்கள். சமூக நீதி கூட்டமைப்பில் சோனியா, ராகுல் வருவார்களா?

திமுகவின் ஒரு வருட ஆட்சியில் சைக்கிள் ஓட்டுவது, டீ குடிப்பது போன்ற செய்தி அரசியலே நடைபெற்றுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் குஜராத்திலிருந்து வெல்லம் இறக்குமதி செய்தது ஏன்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கு ஆதரவாகப் பேசிவிட்டு அதிகாரத்திற்கு வந்தவுடன் திமுக மக்களைக் கண்டுகொள்வதில்லை” என்றார்.

இதையும் படிங்க: 'பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே பன்னீர்செல்வத்தின் தலையாய பணி' - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.