ETV Bharat / state

முதலமைச்சரின் வருகையை ஒட்டி மதுரையில் தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடு - security tighten

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 21) கரோனா தடுப்புப் பணிகள் குறித்து, ஆய்வு நடத்த உள்ள நிலையில், மதுரையில் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி மதுரையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

author img

By

Published : May 20, 2021, 5:52 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 21) மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு, ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இன்று (மே 20) தனி விமானம் மூலம் மதுரைக்கு வரும் முதலமைச்சர் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அரசு அலுவலர்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்கிறார்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கு உள்ளிட்டப் பகுதிகளில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை செய்யும் கருவியுடன் சோதனை செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி மதுரையில் தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடு

இதையும் படிங்க: தனிமனித பிம்ப அரசியல் இனி வேண்டாம்: மநீம குமரவேல் விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.