ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி இந்திய விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்தனர்.
கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனம், கார்களில் வந்தபோது விதிகளை மீறி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அதி வேகமாக வண்டியை இயக்குதல் போன்ற 7 பிரிவுகளின் கீழ் மதுரை போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கம் விலை கிடுகிடு உயர்வு - சவரன் ரூ. 30,656க்கு விற்பனை!