ETV Bharat / state

சினிமா பட பாணியில் திருமணத்தை நிறுத்திய கர்ப்பிணிப் பெண்! - சலசலப்பு

மதுரை: மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wedding stopped
author img

By

Published : Sep 13, 2019, 8:52 AM IST

மதுரை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (29). இவருக்கும் பத்மாவதி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாட்டுத்தாவணி அருகே உள்ள மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், திருமண மண்டபத்திற்குள் நுழைந்த 37 வயது மதிக்கத்தக்க ஈஸ்வரி என்ற பெண் சினிமா படபாணியில் திருமணத்தை நிறுத்துங்க என்று கூச்சலிட்டுள்ளார்.

இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட, அங்கிருந்தவர்கள் அப்பெண்ணிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது அப்பெண், முணியாண்டி தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பாமாக்கிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார் என்று ஈஸ்வரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல்துறையினர், மணமகன் முணியாண்டியையும், பாதிக்கப்பட்ட பெண் ஈஸ்வரியையும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இந்நிலையில், மணப்பெண்ணின் வீட்டார் தங்களை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாகக் கூறி மணமகன் மீது புகார் மனு அளித்தனர். விசாரணையில் ஈஸ்வரியை முணியாண்டி காதலித்தது உண்மை என நிரூபணம் ஆனது. அதனைத்தொடர்ந்து, மணமகன் முணியாண்டி கர்ப்பிணிப் பெண் ஈஸ்வரியுடன் சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டார்.

Intro:காதலித்து ஏமாற்றியதாக கூறி தாலிகட்டும் போது திருமணத்தை தடுத்துநிறுத்திய இளம்பெண். சிக்கிகொண்ட மணமகன். Body:காதலித்து ஏமாற்றியதாக கூறி தாலிகட்டும் போது திருமணத்தை தடுத்துநிறுத்திய இளம்பெண். சிக்கிகொண்ட மணமகன். Conclusion:காதலித்து ஏமாற்றியதாக கூறி தாலிகட்டும் போது திருமணத்தை தடுத்துநிறுத்திய இளம்பெண். சிக்கிகொண்ட மணமகன்.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முணியாண்டி என்ற இளைஞருக்கு மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று காலை 10மணிக்கு தாலி கட்டும் நிகழ்வு நடக்கும் முன்பாக 37வயது மதிக்கதக்க மதுரை விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற இளம்பெண் திடிரென திருமண நிகழ்ச்சிக்குள் புகுந்து தன்னை மணமகன் முனியாண்டி காதலித்து ஏமாற்றி கர்ப்பாமாக்கிவிட்டு தற்போது தனக்கு தெரியாமல. திருமணம் செய்ய முயல்வதாக கூறி திருமணத்தை தடுத்துநிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலிசாருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து வந்த அனைத்து மகளிர் போலிசார் மணமகனையும், இளம்பெண்ணையும் அழைத்து சென்றனர். இந்நிலையில் மணப்பெண்ணின் வீட்டார் தங்களை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் மனு அளித்தனர் மணமகளை தங்களது வீட்டிற்கு போலிசார் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலிசார் மணமகனிடமும், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

மணமகன் முனியாண்டி காதலித்து ஏமாற்றியதாக கூறிய 37வயதுடைய ஈஸ்வரி என்பவர் மணமகனுக்கு சித்தி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் போது முகவர்களின் தவறான தகவல்களை நம்பியதால் மணமேடை வரை சென்று திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.