மதுரை: சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைகாவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட ஆறு காவல்துறையினர் கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர், கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இந்த வழக்கின் சாட்சிகளாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றப்பத்திரிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கையும், டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையும் இடம்பெற்றுள்ளது.
இது தவிர இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குற்றப்பத்திரிகை நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒன்பது காவல் துறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!