ETV Bharat / state

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - மே 6ஆம் தேதி ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குறித்த அடுத்தக்கட்ட விசாரணை மே 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு
author img

By

Published : Apr 28, 2022, 10:47 PM IST

மதுரை: தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனுமான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோரை 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, காவல் துறையினர் தாக்குதலில் ஆவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று (ஏப்.28) மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடைபெற்றது. அப்போது காவலர் முருகன் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வேலூர் கூட்டுப்பாலியல் வழக்கு: மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.