ETV Bharat / state

சாத்தான்குளம் உதவி ஆய்வாளரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி மனு!

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் பால் துரையின் மனைவி, மருத்துவ சிகிச்சையில் உள்ள தனது கணவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி இன்று (ஆகஸ்ட் 8) மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்

sathankulam murder  மதுரை மாவட்டச் செய்திகள்  சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு  சாத்தான்குளம்  sathankulam cop pauldurai wife petition
சாத்தான்குளம் உதவி ஆய்வாளரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி மனு
author img

By

Published : Aug 8, 2020, 4:12 PM IST

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ள உதவி ஆய்வாளர் பால் துரை, கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பால் துரையின் மனைவி மங்கையர் திலகம், அரசு ராசாசி மருத்துவமனையில் இருந்து தனது கணவரை மாற்றம் செய்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வலியுறுத்தி மதுரை காவல்துறை ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.

உதவி ஆய்வாளர் பால் துரையின் மனைவி

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போதுமான வசதிகள் இன்றி எனது கணவர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. ஆகையால் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலையிட்டு எனது கணவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாய்வு காணொலி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.