மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மாநகரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம், வாகன நிறுத்தம், பூங்கா ஆகியவை உயர்தரத்தில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே சுற்றுச்சவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது, இன்று அந்தச் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனாட்சியம்மன் கோயில் அருகே நடைபெற்ற பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.