ETV Bharat / state

சாதனை படைத்த இராசாசி மருத்துவமனை மருத்துவர்கள்!

மதுரை: தமிழ்நாட்டில் முதல் முறையாக மூளையில் ஏற்பட்ட சிக்கல் நிறைந்த புற்றுநோய் கட்டியை  நவீன சிகிச்சையின் மூலம் அகற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்

ராஜாஜி மருத்துவமனை
author img

By

Published : May 21, 2019, 8:53 PM IST

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் வனராஜா (60). முதியவரான இவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருந்துள்ளது. இதனால் சுயநினைவின்றி உயிருக்கு போராடி வந்த வனராஜா, ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக எஃப்எல் 560 என்னும் நவீன கருவியின் மூலம் வனராஜாவிற்கு சிகிச்சை அளித்தனர்.

ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள்

இதன் மூலம் அவரது மூளையில் இருந்த சிக்கல் நிறைந்த புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் குழு புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோன்று மதுரை அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் தலையில் 5 கிலோ கட்டி இருந்துள்ளது. இதையடுத்து மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மருத்துவர் ஸ்ரீ சரவணன் தலைமையிலான மருத்துவர்கள் குழு இவரது தலையில் ஏற்பட்ட மிக சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

தற்போது, அறுவைச் சிகிச்சையின் மூலம் மூளைக்கட்டி நீக்கப்பட்ட வனராஜா, சக்திவேல் ஆகிய இரண்டு நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவை அழைத்து பாராட்டினர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
21.05.2019

*தமிழகத்தில் முதல் முறையாக மூளையில் ஏற்பட்ட சிக்கல் நிறைந்த புற்றுநோய் கட்டியை  நவீன சிகிச்சையின் மூலம் அகற்றி புதிய சாதனை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு*

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான வனராஜா இவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருந்துள்ளது,

அதனால் சுய நினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார்,

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு தமிழகத்திலேயே முதல்முறையாக நவீன உபகரணங்களை பயன்படுத்தி FL 560 எனப்படும் நவீன கருவி மூலம் சிக்கல் நிறைந்த புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்,

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவர் தலையில் 5 கிலோ அளவிற்கு கட்டி இருந்துள்ளது,

இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு டாக்டர் ஸ்ரீ சரவணன் தலைமையிலான மருத்துவர் குழு இருவருக்கும் தலையில் ஏற்பட்ட மிக சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்,

தற்போது இரண்டு நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்,

அதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் வனிதா அவர்கள் டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவை அழைத்து பாராட்டினார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_01_21_ACHIEVEMENT IN SURGERY_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.