ETV Bharat / state

கூடுதல் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்கிடுக! - சு.வெங்கடேசன் கடிதம் - tamilnadu corona

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்கக் கோரி மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்ஷ்வர்தன் ஆகியோருக்கு வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

கூடுதல் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்கிடுக! - சு.வெங்கடேசன் கடிதம்
s-venkatesh-mp-letter-to-central-ministers
author img

By

Published : May 10, 2021, 7:28 PM IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வலியுறுத்தி மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்," தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இடம் ஓர் அவசரக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

சு.வெங்கடேசன் கடிதம்
சு.வெங்கடேசன் கடிதம்

ஒரு நோயாளிக்கு ஆறு குப்பிகள் வீதம் 1166 நோயாளிகளுக்கு மட்டுமே கொடுக்கக்கூடிய ரெம்டெசிவிர் மருந்தை மத்திய அரசு அளிக்கிறது. இந்த தினசரி அளவை மூன்று மடங்காக உயர்த்தவும், தின அளிப்பை 7000லிருந்து 20,000ஆக உயர்த்துமாறு அவர் கோரியுள்ளார்.

தமிழ்நாட்டின் தேவை பற்றி முதலமைச்சர் கூறுவதற்கு நான் கள சாட்சியத்தை மதுரையில் காண்கிறேன். மதுரைக்கு தின அளிப்பு 500 மட்டுமே. ஒரு நோயாளிக்கு ஆறு குப்பிகள் வீதம் தினமும் 80 நோயாளிகளுக்குகே போதுமானது. ஆனால் மருந்து வாங்குகிற வரிசை மிக நீண்டதாக உள்ளது. எண்ணிக்கை 250 பேரை கடக்கிறது.

இந்த இடைவெளி இன்னும் விரிவடைந்தால் என்ன ஆகும் என்ற கவலை மனதை கவ்வுகிறது. விளைவுகள் மிக மோசமானதாக அமையும். நேரம் விரைவாக ஓடுகிறது. முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசின் அமைச்சர்கள் பியூஷ் கோயல் (ரயில்வே மற்றும் வர்த்தகம்) ஹர்ஷ வர்தன் (சுகாதாரம்) ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மோடி அரசின் அலட்சியத்தின் விலையை இந்தியா சுமக்கிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.