ETV Bharat / state

திருமங்கலம் பார்முலாவைப் பயன்படுத்தி திமுக வெற்றி பெற முயற்சி - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில், திருமங்கலம் பார்முலாவைப் பயன்படுத்தி, திமுக வெற்றிபெற முயற்சி செய்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திருமங்கலம் பார்முலாவைப் பயன்படுத்தி திமுக வெற்றி பெற முயற்சி - ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Oct 8, 2021, 9:55 PM IST

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆட்சியர் அனீஷ் சேகரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முள்ளாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, 'மதுரையில் 16ஆவது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்குச்சாவடிகளில் 10 மையங்களில் மட்டுமே சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர்.

மற்ற வாக்குச்சாவடி மையத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மக்கள் அச்சுறுத்தல் இல்லாமல் வாக்களிக்க நடவடிக்கை வேண்டும். உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை முறையாக மாவட்ட நிர்வாகம் பின்பற்ற வேண்டும்.

திமுகவின் தவறான வியூகம்

திருமங்கலம் பார்முலாவை செயல்படுத்தி திமுக வெற்றி பெற முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. அதிமுக வெற்றியைத் தடுக்க அரசு நிர்வாகத்தை, திமுக தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

திமுகவினர் செய்யும் பணப்பட்டுவாடா குறித்து ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம். ஆளும்கட்சி அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.
ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தம்
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படாததால், அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாலிக்குத் தங்கம் திட்டம், முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜக அத்துமீறல் நடைபெறுகிறது. திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணவிநியோகம் செய்கின்றனர்.

நாங்கள் மதுரையில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு வாக்கு கேட்கிறோம். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, எங்களுக்குச் சாதகமாக உள்ளது' என்றார்.

இதையும் படிங்க: திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.