மதுரை: மதுரை அவ்வை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (ஜூன் 15) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளது. அதன்படி 130 நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 25 நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகைக்கடன் தள்ளுபடி, நான்கு ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'திமுகவில் மேலும் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர்..!' - எடப்பாடி பழனிசாமி