ETV Bharat / state

மதுரையில் குடிபோதையில் இருந்த ரவுடி படுகொலை - madurai district news

மதுரை: குடிபோதையில் இருந்த ரவுடியை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி படுகொலை
ரவுடி படுகொலை
author img

By

Published : Sep 25, 2020, 10:42 AM IST

மதுரை மாவட்டம், குற்றப்பிரிவு கட்டடம் அருகேயுள்ள ஒண்டிமுத்து பிள்ளை தெருவைச் சேர்ந்தவர், சரவணன். இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

நேற்று (செப்.24) இரவு இவர் அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ரவுடி படுகொலை

இதில் அந்தக் கும்பல் சரவணன் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்குவாசல் காவல் துறையினர் சரவணன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்த காவல் துறையினர், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த விவரங்கள் குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்தார். தங்கையின் கணவருக்கும் சரவணனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன்காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளதா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை: இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.