மதுரை: மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதி அருணகிரிநாதர் அண்மையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனத்தை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மதுரை ஆதீன மடத்துக்குச் சென்ற அவர் அருணகிரிநாதரின் அறையைப் பூட்டி சீல் வைத்தார்
இந்த நிகழ்வு மதுரை ஆதீன மட இளைய சன்னிதானம், ஆதீன மட ஊழியர்கள், ஆதீன மடம் தொடர்புடைய ஆன்மிக ஆர்வலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ஆதீனம் உயிரோடு இருக்கையில் தருமபுரம் ஆதீனம் செய்த செயல்
அருணகிரிநாதர் உயிருடன் இருக்கும் நிலையில், இந்த நிகழ்வை தருமபுரம் ஆதீனம் நடத்தி இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எதற்காக தருமபுரம் ஆதீனம் அருணகிரிநாதரின் அறையைப் பூட்டி சீல் வைத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் தருமபுரம் ஆதீனத்திற்குத் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஆதீன மட வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மதுரை ஆதீனத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு - இன்று நள்ளிரவு முதல் அமல்