மதுரை : மதுரையில் ஞாயிறு பொதுமுடக்கம் நடைபெற்றுவரும் நிலையில் 90 சதவீத மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கிவருகின்றனர்.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் மதுரை மக்களால் 90 சதவீத முழு ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம் நடைபெற்று வரும் நிலையில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால் ஜன. 17ஆம் தேதிக்கு தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஜன.16) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அவசியமின்றி வெளியே வரும் நபர்களை காவல்துறை விசாரித்து திரும்ப அனுப்பி வருகின்றனர்.
அதுபோன்று பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை எச்சரித்தும் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. பெரும்பாலான சாலைகள் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதையும் படிங்க : ஞாயிறு ஊரடங்கு: சேலத்தில் பாதுகாப்பு பணியில் 2000 காவலர்கள்!