தமிழ்நாடு அரசின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் மதுரை பரவை கண்மாய் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது.
அதனை ஆய்வுசெய்த தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், "புயல் பாதிக்கப்படவுள்ள 12 மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி நியாய விலைக் கடைகள் மூலம் பொருள்கள் வழங்க அனைத்துக் கடைகளில் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகப் பேசிவருகிறார்கள்" என்றார்.
பின்னர் தேனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வன் வாய்த்தவறி திமுக படுதோல்வி அடையும் எனப் பேசியது குறித்த கேள்விக்கு, "உண்மையைக் கூறியுள்ளார். திமுக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. முதலில் ஸ்டாலின் மட்டும் நாடகமாடினார், தற்போது அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார். அப்பனுக்குத் தப்பாத பிள்ளையாக உதயநிதி ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புயல், மழையின்போது மின் விபத்துகளைத் தடுப்பது எப்படி?