ETV Bharat / state

திண்டுக்கல்லில் இருந்து மதுரை - சென்னை தேஜஸ் ரயிலை இயக்க கோரிக்கை

இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக மதுரையில் இருந்து இயக்கப்படும் மதுரை-சென்னை தேஜஸ் ரயிலை திண்டுக்கல்லில் இருந்து இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேஜஸ் ரயில்
தேஜஸ் ரயில்
author img

By

Published : Feb 12, 2023, 9:12 AM IST

மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. அந்த வழியாக செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 10ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறது. இதனால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரையில் இருந்து வருகிற 19, 21, 26, 28-ஆம் தேதிகளில் புறப்படும் டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12651) மற்றும் பிப்ரவரி 14, 16, 21, 23-ஆம் தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்படும் மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12652) ஆகியவை விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்நிலையில் பயணிகள் வசதிக்காக அந்த ரயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மதுரை-சென்னை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலையும் திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் பிப்.14ஆம் தேதி குடிநீர் நிறுத்தம்..! எந்தெந்த பகுதிகள்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.