ETV Bharat / state

ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் கோரிக்கை - தமிழ் செய்திகள்

மதுரை: உணவகங்களில் மக்கள் அமர்ந்து உண்ணும் அனுமதியை அரசு தரவேண்டும் என மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் கோரிக்கை

author img

By

Published : May 12, 2020, 11:51 AM IST

கரோனா வைரஸ் தொற்றையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக செய்த தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. 34 தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனையோடு கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் கூடிய மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தமிழ்நாடு அரசின் உத்தரவோடு மேலும் சில தொழில்களை தொடங்க அனுமதி அளித்துள்ளது. தேநீர் கடைகள், பேக்கரி, உணவகங்கள் காலை 10 மணிக்கு தொடங்கி 7 மணிவரை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்திலும் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் குமார் நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “ மதுரை மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவில் உணவு தொழில்துறை சார்பாக நான் உறுப்பினராக அங்கம் வகிக்கிறேன்.பார்சல் மட்டும் வழங்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் அது போதுமான வரவேற்பை பெறவில்லை. ஆகையால் அதில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் தகுந்த இடைவெளியோடு வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். பார்சல் மட்டும் வாங்கிக்கொண்டு செல்வதில் வாடிக்கையாளர்களுக்கு போதுமான ஆர்வம் இல்லை. ஆகையால் விற்பனையிலும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் கோரிக்கை

தேநீர் கடைகளுக்கும், பேக்கரிகளுக்கும் இது பொருந்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கிருமி நாசினி, முகக்கவசம், தகுந்த இடைவெளி என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு புத்தக ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று புத்தகக் கடைகளைத் திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதேபோன்று பேப்பர் விற்பனையாளர்கள், போட்டோ ஸ்டுடியோ, எழுதுபொருள் விற்பனை ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரையின் அடையாளமாக திகழ்கின்ற ஜிகர்தண்டா உள்ளிட்ட குளிர்பான கடைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது: திக தலைவர் கி.வீரமணி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.