மதுரை உயர்நீதிமன்ற கிளையின் வரம்புக்குட்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனி நீதிபதியை நியமிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சார்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், " எம்எல்ஏ, எம்பிக்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. தற்போது நீதிபதி எம். நிர்மல்குமார் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறார்.
ஆனால், மதுரையின் வரம்புக்குட்பட்ட 14 மாவட்டங்களில் இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அவற்றை விசாரிக்க மதுரையில் பிரத்தியேக நீதிபதி இல்லை.
இதன் காரணமாக வழக்கு தொடர்பவர்களும், வழக்கறிஞர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க மதுரைக்கிளையில் தனிநீதிபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: State Press Council அமைக்க சட்டவிதிகள் உள்ளதா? - இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு நீதிமன்றம் கேள்வி